தேர்தல் முடிவுகளை அறிவிக்க தாமதமாகும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .ஆனால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும்  மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை, மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here