32.2 C
Chennai
Thursday, June 1, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

டேராடூன் – டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும். இது டெல்லிக்கு இயக்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொளி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 314 கிமீ தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டேராடூன் மற்றும் டெல்லி இடையே ஹரித்வார், ரூர்க்கி, சஹாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுகிறது.