டேராடூன் செல்லும் இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி திரும்பியது.
இன்று 6E 2134 என்ற இண்டிகோ விமானம் டெல்லியில் இருந்து உத்தரகாண்டில் உள்ள டேராடூனுக்கு புறப்பட்டது. பிறகு திடீரென ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக, விமானி ஏடிசிக்கு நடைமுறைப்படி தகவல் அளித்த நிலையில் மானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
மேலும், தேவையான பராமரிப்புக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று இண்டிகோ கூறியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இன்னும் விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.