பனி உறையில் சிக்கித் தவித்த மான்.! பத்திரமாக மீட்ட மீட்புக்குழு.!

  • பனி உறைந்த குளத்தில் சிக்கித் தவித்த மான் பத்திரமாக மீட்பு.
  • கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து காணப்பட்டது.

அமெரிக்காவின் வயோமிங்கிங் மாகாணத்தில் பனி உறைந்த குளத்தில் தவறி விழுந்த மான் ஒன்று பத்திரமாக மீட்டகப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சப்லேட்டே நகரில் உள்ள குளத்தில் நீர் உறைந்து இருக்கும் நிலையில், அதில் சறுக்கி விழுந்த மான் ஒன்று எழுந்து நிற்க முடியாமல் போராடியது வந்தது.

இதனை பார்த்த காவலர்கள் மானை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு பின்னர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மற்றும் கடும் பனியால் உடல்கள் விரைத்து நடக்க முடியாமல் கிடந்த மானை அங்கிருந்து தூக்கி வந்த மீட்புப்பணியினர், சூடான தரை தளத்தில் வைத்தனர். பின்பு குளிரின் தாக்கத்தில் இருந்து விடுபட்ட மான் அங்கிருந்து சென்றதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்