தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!

தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது  போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போதைப்பொருள் பயன்படுத்தியது  மற்றும்   சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சுஷாந்த் காதலியும், நடிகையுமான  ரியா சக்கரபர்த்தி கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

மேலும், ரியாவின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்  அனுப்பியது.

அதில், நேற்று படுகோனுக்கும், ரகுல் ப்ரீத் சிங்க்கும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் மேலாளரான கரிஷ்மா பிரகாஷ் ஆஜர் ஆனார்.

அவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று  நடிகை தீபிகா படுகோன்  விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

 அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இன்று ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் ஆஜர் ஆனார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!