தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைப்பு.. உயர்நீதிமன்றம்..!

தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைப்பு.. உயர்நீதிமன்றம்..!

இறந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், போயஸ் தோட்ட வேதா நிலைய வீடு எனது பாட்டியால்  வாங்கப்பட்டது. அந்த வீட்டை எனது அத்தைக்கு  உயில் எழுதி என் பாட்டி வைத்தார்.

எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுககள் இந்த இல்லத்தில் தான் நடைபெற்றது. இதனால், வேதா நிலைய வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே, வேதா இல்லத்தை கையகப்படுத்துவதும் அரசு அறிவிப்பை ரத்து செய்து,வீட்டை கையகப்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை  விசாரித்த தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு வழக்கை மாற்ற கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகிய இரு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபா தொடர்ந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. மனு பட்டியலிட்ட பின் இரண்டு வழக்கையும் விசாரிப்பதாக கூறி வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!