கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான முடிவுகள்

By surya | Published: May 30, 2020 07:31 PM

இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில், பெற்றோர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc