லண்டனில் அம்பேத்கர் மியூசியத்தை மூட முடிவு..! மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு !

அம்பேத்கர்,லண்டனில் பொருளாதார கல்வி பயின்றபோது கிங் ஹென்றி சாலையிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தங்கியிருந்தார். இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் அம்பேத்கரின் நினைவாக இந்த கட்டிடத்தை வாங்கிய இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை, புகைக்கப்பட கண்காட்சி, நூலகம் ஆகியவை நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பேத்கர் மியூசியத்தை பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வருவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மியூசியத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக லண்டன் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் லண்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு இங்கிலாந்து அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Vidhusan