மீட்பு பணியில் சிறுமாற்றம்..!ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் மூலம் துளையிட முடிவு..!

கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.சுர்ஜித்தை மீட்க 66 மணிநேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே ஒரு அங்குலம் அகலத்திற்கு 90 அடி ஆழம் குழி தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது. இதுவரை 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும் , இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் தோன்றியுள்ளது.
இரண்டாவது ரிக் இயந்திரத்தின் டிரில் பிட் சேதம் அடைந்து உள்ளதால்  கடினமான பாறைகள் துளையிட ரிக் இயந்திரத்திற்கு பதிலாக தற்போது போர்வெல் இயந்திரத்தின் மூலம் துளையிட முடிவு  செய்யப்பட்டு உள்ளது.இரண்டாவது ரிக் இயந்திரத்தின் டிரில் பிட் பழுதானதால் கடின பாறைகளை தொடர்ந்து துளையிட போர்வெல் இயந்திரத்தின் மூலம்  பணியை தொடங்க  உள்ளனர்.

author avatar
murugan