பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி! நகைக்கடைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

அந்நிய செலவாணி மோசடியால் நகை கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி என்ற நிறுவனம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், நிறுவன இயக்குநர் நிலேஷை விசாரித்து அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 7,220 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதை கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அன்னிய செலாவணி மோசடி சட்டத்தில் மிகப்பெரிய தொகைக்கு நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.