பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது  என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நல்ல நடிகர் ஆவார்.இவர் திரைத்துறையில் இருந்த போது நடிகர் சங்க கடனை அடைத்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.பின் இவர் தீவிர அரசியலில் ஈடுப்பட்ட போது சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகினார்.இதன் பின்  கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார்.இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆவார் .இவரும் விஜயகாந்துடன் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.அதேபோல் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் ஆவார்.

Related image

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும். பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது .கூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here