வேட்புமனு பரிசீலினையில் வாக்குவாதம் – அமைச்சர் ஆர்பி உதயகுமார் போட்டியிடும் திருமங்கலம் தொகுதியில் பதற்றம்.!

திருமங்கலம் தொகுதியில் வேட்புமனு பரிசீலினையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா முன்னிலையில் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தரப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர்களை விதிமுறைகளை மீறி அனுப்பியதாக எதிர்கட்சியிடன் குற்றசாட்டை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து அதிமுக அரசு தரப்பு வழக்கறிஞர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனாலும், தொடர்ந்து வேட்புமனு பரிசீலினையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால், பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களையும் தனி தனியாக அழைத்து, தனி அறையில் வைத்து வேட்புமனு பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டு, முதல் வேட்பாளராக திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வேட்புமனுவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்புமனு பரிசீலினையானது அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்றும் விதிமுறையை மீறி ஒருதலைப்பட்சமாகவும் நடத்தப்படுவதாக தொடர் குற்றசாட்டு வைத்து, தேர்தல் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்