ஜப்பான் வெள்ளம்: உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக உயர்வு.!

ஜூலை-7 ஜப்பானின் பேரழிவு மேலாண்மை நிறுவனம் கூறுகையில் , வெள்ளத்தால்

By gowtham | Published: Jul 07, 2020 04:42 PM

ஜூலை-7 ஜப்பானின் பேரழிவு மேலாண்மை நிறுவனம் கூறுகையில் , வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது, பலர் பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஜப்பானின் தெற்கு பிராந்தியமான கியூஷுவில் கடந்த  வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் இருந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி இறந்தவர்களில் 49 பேர் குமாமோட்டோ பிராந்தியத்தில் உள்ள ஆற்றங்கரை நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்று தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தெற்குப் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்ததால் புகுவோகாவில் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 50 ஆக அதிரித்துள்ளது. மேலும் பலர்  காணவில்லை என்றும் வெள்ள நீர் மற்றும் தொடர்ச்சியான கடுமையான வானிலை காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc