உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பலி எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 63 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரோசாபாத் மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் 63 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு டெங்கு நோய்க்கான சிகிச்சையின் போது 12 வயது சிறுமி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 12 வயது சிறுமியின் சகோதரர் தீபக், தனது சகோதரிக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுவே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவ ஊழியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் குடும்ப உறுப்பினர்களால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.