“3 நாளுக்கு முன் இறந்தவருக்கு ஆப்ரேசன்”ரமணா பட பாணியில் அசத்திய மருத்துவமனை…!!!

 இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு ரமணா பட பாணியில், அறுவை சிகிச்சை செய்துள்ளது மருத்துவமனை

நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் கிராமத்தைச் சேர்ந்த, 55 வயதான சேகர், அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்தவர். வயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நடத்துனர் சேகர், நாகப்பட்டினத்தில் உள்ள சந்திரசேகர் என்ற மருத்துவரிடம் காண்பித்துள்ளார். இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் சந்திரசேகர் குடல் இறங்கி விட்டதாக கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதன் பின்னர், திடீரென மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூரில், டாக்டர் செந்தில்குமார் என்பவர் நடத்தும் கே.ஜி மருத்துவமனைக்கு, நாகப்பட்டினம் மருத்துவர் சந்திரசேகர் பரிந்துரை செய்து அனுப்பி உள்ளார்.

Related image

கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நடத்துனர் சேகர், தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. சிகிச்சை செலவாக ஐந்தரை லட்ச ரூபாயை, சேகரின் குடும்பத்தினர் சிகிச்சை செலவாக செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்தால், பூரணமாக குணமடைந்துவிடுவார் என்று கூறி வியாழக்கிழமை மதியம்சிக்கிச்சை அளிக்கும் கேஜி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Image result for kg hospital thanjavur

இந்நிலையில் நடத்துனர் சேகர் அனுமதித்து 17 நாட்கள் ஆனதோடு, லட்சக்கணக்கில் பணமும் செலவும் செய்து, குணமடையவில்லையே என்ற கவலையில் இருந்த நடத்துநர் சேகரின் குடும்பத்தினர் மேலும் இரண்டரை லட்ச ரூபாய் ஃபீஸ் கட்டுமாறு கேஜி மருத்துவமனை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இனி தங்களிடம் பணம் இல்லை என்றும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யுமாறு நடத்துனர் சேகரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Image result for OPERATION

இதனை அடுத்து சேகரை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து, அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்திருக்க வேண்டிய கேஜி மருத்துவமனை தொடர்ந்து இழுத்தடித்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை பிற்பகலில், மருத்துவ உபகரணங்களோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளது.

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நடத்துநர் சேகரை பரிசோதினை செய்த போது தான் உண்மை தெரியவந்தது.அவர் உயிரிழந்து மூன்று நாட்களாவிட்டதாக நடத்துநர் சேகரை பரிசோதித்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், கூறியதை கேட்டு அவரது குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் பணமும் பறிபோய்,பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

Related image

உடனடியாக கேஜி மருத்துவமனை நிர்வாகத்தை அணுகி முறையிட்டு உள்ளனர். ஆனால் ஏதோ ரமணா படத்தில் வருவது போல், இறந்த உடலுக்கு, சிகிச்சை அளித்து விட்டு மெத்தனமாக இருந்துள்ளது கேஜி மருத்துவமனை இதற்கு உரிய பதில் கூறாமல் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளது நிர்வாகம் இதையடுத்து இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த சேகரின் மகன் சுபாஷ் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில்இறந்த சேகரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து டாக்டர் செந்தில்குமார் நடத்தும் கேஜி மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது, இறந்தவரின் உடலுக்கு சிகிச்சை அளித்ததை பற்றி குற்ற உணர்ச்சி சற்றும் இல்லாமல் பணம் தராமல் இருப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக டாக்கடர் செந்தில் குமார் கூறினர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment