மணமகன் மரணம்.! திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து

By ragi | Published: Jul 01, 2020 03:10 PM

பாட்னாவில் திருமணம் ஆன இரண்டே நாட்களில் மணமகன் உயிரழந்ததை அடுத்து திருமணத்தில் கலந்து கொண்ட 100-க்கு  மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 15-ம் தேதி பீகார் தலைநகரான பாட்னாவில்  உள்ள பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன இரண்டே நாட்களில் திடீரென மணமகன் உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலே மணமகன் உடலை தகனம் செய்துள்ளனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரா..? என்பதை கண்டறிய முடியவில்லை.

இதனையடுத்து, மணமகனின் நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாட்னாவின் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரின் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்தனர்.

அதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது, சாப்ட்வேர் என்ஜீனியரான தீபாலி தனது திருமணத்திற்காக  -சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், அதை அறியாமல் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் மணமகன் உடல் மோசமடைய பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் மணமகளுக்கு கொரோனா தொற்று இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc