இறந்த பிரியங்கா குடும்பத்திற்கு தமிழிசை ஆறுதல்..! பாராட்டும் நெட்டிசன்கள் ..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கால்நடை மருத்துவர்

By murugan | Published: Dec 01, 2019 03:56 PM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கால்நடை மருத்துவர் பிரியங்கா மருத்துவமனையிலிருந்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரியங்கா.மீண்டும் அன்று மாலை கால்நடை ஒன்று அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை இதைத் தொடர்ந்து பிரியங்கா பெற்றோர் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இது தொடர்ந்து ரங்காரெட்டி மேம்பாலத்திற்கு கீழ் இளம்பெண் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் இருப்பதாக சாய் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் பிரியங்கா குடும்பத்தினரிடம்  தகவல் கொடுத்து வரவைத்து அந்த உடலை அவர்களிடம் காட்டியுள்ளனர். அது பிரியங்கா என குடும்பத்தார்கள்  உறுதி செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் , கிளீனர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் உயிரிழந்த பிரியங்கா வீட்டிற்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் செல்லாத நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்று ஆறுதல் கூறியுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலர் தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டி வருகின்றனர்.பலர்  ஆறுதல் கூற செல்லாத சந்திரசேகர ராவ்வை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc