கொரோனா தொற்றால் தொடரும் செவிலியர்களின் மரணம்…!

சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும், இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், மக்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது, கவலை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.

அந்த வகையில், சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் வசதியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து, மீண்டு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டார். எனினும் மீண்டும்கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர் தற்போது உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.