அமெரிக்காவில் நடந்த சோகம்.! கொரோனா பார்ட்டியில் பங்கேற்ற இளைஞர்உயிரிழப்பு.!

அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்துகொண்ட  இளைஞர் உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் அதிக பாதித்த  நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 33 லட்சத்தில் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு விபரீத விளையாட்டு பரவி வருகிறது. அதாவது அது என்னவென்றால், அது தான்  “கொரோனா பார்ட்டி”.  கொரோனா வைரஸ் உண்மையானதா..? என்று சோதிக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பார்ட்டியில் கலந்து கொள்வார்கள்.

அப்படி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரைச் சேர்ந்த 30 வயதான  இளைஞர் ஒருவர் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு உயிரிழந்தார். இதுகுறித்து சான் அன்டோனியோவில் உள்ள மெதடிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜேன் ஆப்பில்பி கூறுகையில், உயிரிழந்த இளைஞர் “கொரோனா பார்ட்டி” கலந்து கொண்டு உள்ளார்.

கொரோனா பாதித்தவர்கள் அந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டதால் இந்த இளைஞருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பலனின்றி  இவர் உயிரிழந்தார்  எனத் தெரிவித்தார். இந்த பார்ட்டி எப்போது நடந்தது, எத்தனை பேர் கலந்து கொண்டனர் அல்லது எவ்வளவு நாட்களுக்குப் பிறகு இந்த இளைஞர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரியவில்லை.

மேலும், இறப்பதற்கு முன் அந்த இளைஞர் செவிலியரிடம் ‘நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இது ஒரு ஏமாற்று வேலை என்று நான் நினைத்தேன், ஆனால் அது இல்லை’ என  கூறினார் என தலைமை மருத்துவ அதிகாரி ஜேன் ஆப்பில்பி கூறினார்.

author avatar
murugan