ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்! மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஹார்லி டேவிட்சன்! மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞர்கள்!

மீண்டும் இந்தியாவிற்குள் நுழையும் ஹார்லி டேவிட்சன்.

அமெரிக்காவின் பிரபல மோட்டார் நிறுவனமான, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த 111 ஆண்டுகளாக, இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், ஹரியானாவில் மட்டும் தான் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மாடல் பைக்குகள் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம், உலக நாடுகளில் குறைவான அளவே தங்கள் பைக்குகள் விற்பனையாகும், நாடுகளில் இருந்து, வெளியேற திட்டமிட்டது. இதனையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு இளைஞர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து, இந்தியாவில், தனது வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ள, புதிய வழிமுறையை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஹார்லி டேவிட்சன், ஹீரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஹார்லி டேவிட்சன், தான் மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை ஹீரோ ஷோரூம் மூலமாக மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.