முடிந்தது கெடு…இன்று கோட்டை நோக்கி மாபெரும் பேரணி – பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார்.மேலும்,மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே,மத்திய அரசானது பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் குறைத்துள்ளது.இதன்மூலம்,கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.14-ம், டீசல் விலை ரூ.17-ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,மத்திய அரசுக்கு ரூ.1,10,000 கோடி இழப்பு ஏற்படும்.

ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது.எனவே,திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.இதனை 72 மணி நேரத்திற்குள் இந்த அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்,போராட்டம் நடத்துவோம்” என்று கெடு விடுத்தார்..

இந்நிலையில்,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.குறிப்பாக, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment