மாணவர்களின் மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுப்பு..! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!

மேற்கு வங்கத்தில் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சஹுர்காச்சி பித்யானந்தபூர் தொடக்கப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மால்டா மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா கூறுகையில், ‘மதிய உணவில் இறந்த பல்லி மற்றும் எலி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகார் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 6 ஆம் தேதி, மேற்கு வங்க அரசு ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கு மதிய உணவில் சிக்கன் மற்றும் பருவகால பழங்களை வழங்க முடிவு செய்து, அதை அறிமுகப்படுத்த ரூ.371 கோடி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment