டி காக், டு ப்லெசிஸ் காட்டடி!! இலங்கையை 8 விக்கெட் வித்யாசத்தில் புதைத்தது தென்னாப்பிரிக்கா!!

  • இலங்கை மற்றூம் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது
  • இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே மோசமாக ஆடிய இலங்கை அணி பெரிதாக ஏதும் சேர்க்க முடியவில்லை. அந்த அணியின் குஷல் மெண்டிஸ் 60 ரன்களும் பெர்னாண்டோ 49 ரன்களும் அடிக்க அந்த அணி 231 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் குவிண்டன் டி காக் அதிரடியாக ஆடினார். அவர் 72 பந்துகளில் 81 ரன் குவித்தார். பின்னர் வந்த கேப்டன் பாப் டு பிளசிஸ் 112 ரன்கள் அனாசயமாக குவிக்க 38.5 ஓவர்களில் 237 ரன்களை எடுத்தால் எளிதில் வெற்றி பெற்றது.

author avatar
Srimahath

Leave a Comment