வந்தாச்சு சூப்பர் அப்டேட்…இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்யலாம்!

WhatsApp

உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் தங்களின் வாட்சப் பயனர்களுக்கு தேவையான அம்சங்களை வழங்குவதிலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்த்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.முன்னதாக இந்த வசதி Android மற்றும் iOS மொபைல் போன்களில் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

மேலும்,புதுப்பிக்கப்பட்ட குரூப் அளவு உலகின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இதனால் பயனர்கள் இனி அதிகமான நபர்களுடன் குரூப் அரட்டையைக் கையாள முடியும்.

நீங்கள் அம்சத்தைப் பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?

மேம்படுத்தப்பட்ட குழு அளவுக்கான புதுப்பிப்பை நீங்கள் பெற்றுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்க,நீங்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி,திரையின் மேற்புறத்தில் சரிபார்ப்பதன் மூலம் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்கலாம்.

2ஜிபி வரை அனுப்பலாம்:

அதே சமயம்,இதுவரை வாட்ஸ்அப்பில் பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு குறைந்த அளவிலான கோப்புகளை (Files) மட்டுமே அனுப்ப முடியும்.குறிப்பாக,100 MB க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாத நிலை இருந்து வந்தது.இதனால் பயனர்கள் பெரிய அளவிலான கோப்புகளை அனுப்புவதற்கு டெலிகிராம் போன்ற பிற அப்ளிகேஷனை தேடி சென்றனர்.

இந்நிலையில்,2ஜிபி வரையிலான போட்டோ,வீடியோ போன்றவற்றை பகிரும் வசதியும் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதைப்போல,இதற்கு முன்பாக ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ காலில்(voice call) 8 பேர் மட்டுமே இணையும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே நேரத்தில் 32 பேர் வரை கலந்துரையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இந்த அம்சத்தைப் பெறாதவர்கள் நிச்சயமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் புதுப்பிப்பைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.இந்த அறிவிப்பு வாட்ஸ்அப் பயனர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம்:

இதனிடையே,வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.அதன்படி, வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here