டெல்லி கேப்பிடல் அபார பந்துவீச்சு!! 116 ரன்களுக்கு மண்டியிட்டது ஹைதராபாத் !!

7

டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி டெல்லி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. துவக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினார்.

எதிர் அணியின் துவக்க வீரர்கள் இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த காலின் முன்ரோ  40 ரன்களும் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் கலீல் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 156 ரன் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் இலக்கை நோக்கி முன்னேறியது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோ 31 பந்துகளில் 41 ரன் விளாசி அசத்தினா.ர். அதன் பின்னர் வந்த ஒவ்வொரு வீரரும் ஒற்றை இலக்கத்தில் வெகுவேகமாக வெளியேறினார்.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அந்த அணியின் விக்கெட்டுகள் சாய்த்தனர். அந்த அணியின் கீமோபால் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ரபாடா 4 விக்கெட்டுக்களை வீழ்த்த 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி முன் மண்டியிட்டது ஹைதராபாத் அணி. இதன் மூலம் டெல்லி அணி 39 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.