டெல்லி vs சென்னை: டெல்லி அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர்.

குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

சென்னை அணிக்கு எதிராக ஆடும் டெல்லி அணியின் கணிக்கப்படும் 11 வீரர்கள்.

சாத்தியமான டெல்லி அணி:

ஷிகார் தவான், பிருத்வி ஷா, கொலின் இங்கிராம், ஷிரியாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸார் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா, சந்தீப் லேமச்சேன் , ட்ரெண்ட் போல்ட், கிகிஸோ ரபாடா

author avatar
Vignesh

Leave a Comment