குறளி வித்தை காட்டி மறையும் வார்னர்.. வைரலாகும் வீடியோ..!

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு குறளி

By surya | Published: May 26, 2020 08:28 PM

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு குறளி வித்தையை செய்துள்ளார். தற்பொழுது அது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் வித்தியாச வித்தியாசமாக வீடியோக்களை பதிவிடுவார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்கஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ், அவரின் ஆர்வத்தை அடக்கியது. இந்நிலையில், வீட்டில் வெட்டியாக இருக்கும் அவர், டிக்டாக்கில் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து வீடியோக்களை பதிவுசெய்ய தொடங்கினார். அதில் முக்கியமாக, அவர் "புட்ட போம்மா" பாடலுக்கு அவர் மனைவியுடன் நடனமாடினார்.

அந்த வீடியோ ட்ரெண்டான நிலையில் அதனை தொடர்ந்து இந்திய படத்தின் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு விடியோக்களை செய்ய தொடங்கினார். இந்நிலையில், தற்பொழுது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் அவர் குறளி வித்தை செய்தார். அதாவது, அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது பேட்டை வைத்து பயிற்சி பெற்று வந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Shadow batting and then you hear the wife and kids are home?? see ya later guys. #magicbat #fun #challenge @urstrulymahesh

A post shared by David Warner (@davidwarner31) on

மனைவி மற்றும் மகள் வீட்டிற்கு வருவதை அறிந்த அவர், அவர் கையிலிருந்த பேட்டை வைத்து அவரின் தலை முதல் கால் வரை பேட்டை வைக்கிறார். அப்பொழுது அவர் மறைந்துவிடுகிறார். இவரின் இந்த குறளி வித்தை, தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், அவரை பலரும் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc