சொத்தை மாற்றித்தர மறுத்த மாமனாரை கட்டையால் அடித்துக் கொன்ற மருமகள்.!

சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காததால் மாமனாரை கட்டையால் அடித்து

By bala | Published: Jul 07, 2020 05:38 PM

சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்காததால் மாமனாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகள்.

அரியலூர் மாவட்டத்தில் செந்துறையிலுள்ள காவேரி பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி , இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 2010ம் ஆண்டு இவருடைய மூத்த மகன் இராமலிங்கம் உயிரிழந்தார். இவருடைய மனைவி இரானி, மேலும் தனது மகன் இறந்ததை தொடர்ந்து தங்கசாமிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒரு பாகத்தை இராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ராணி தனக்கு வழங்கிய நிலத்தை தனது பெயருக்கு மற்ற சொல்லி தனது மாமனாரான தங்கசாமியிடம் தொடர்ந்து கேட்டுள்ளார், மேலும் இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, மேலும் தங்கசாமி தனது வீட்டில் படித்திருந்த போது வேகமாக கோபத்துடன் சென்ற ராணி கீழே இருந்த கட்டையை எடுத்து மாமனார் என்று கூட பார்க்காமல் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

இதனால் பயங்கரமாக காயமடைந்த தங்கசாமி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் இதனை தொடர்ந்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்யுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc