பொங்கலுக்கு வெளியாகுமா தர்பார்! உயர்நீதிமன்றத்தில் எழுந்த புதிய சிக்கல்!

வருகிற பொங்கல் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு,ஜனவரி 9ஆம் தேதி ரஜினிகாந்தின்

By manikandan | Published: Dec 30, 2019 04:41 PM

வருகிற பொங்கல் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு,ஜனவரி 9ஆம் தேதி ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்த படம் வெளியிட கூடாது என ஒரு நிறுவனம் லைகா நிறுவனம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் இதற்கு முன்னர் தயாரித்து வெளியிட்ட 2.ஓ திரைப்படத்தின் போது, 20 கோடி ரூபாய் கடன் வானியதாகவும், அந்த பணத்தை முழுதாக தரவில்லை எனவும் கூறி, தர்பார் படத்தை வெளியிட கூடாது என கூறி, உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி  2ஆம் தேதி மனுதாரர் தரப்பும், லைகா நிறுவன தரப்பும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.
Step2: Place in ads Display sections

unicc