ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல் – மு.க.ஸ்டாலின்

80 வயதுக்கு மேற்பட்டோரிடம் வீட்டுக்குச் சென்று தபால் வாக்கை பெறும் முறை, ஜனநாயகத்தின் உயிர்நாடியான ரகசிய வாக்களிப்பை சவக்குழியில் தள்ளும் அபாயச் செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பீகார் மாடல்’ கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி பேரதிர்ச்சி அளித்திருக்கிறது.பீகார் தேர்தலில், 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும் ‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள்(Absentee voters) என்ற புதிய வகையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ‘தபால் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

பூத் லெவல் அதிகாரி வீட்டிற்குச் சென்று தபால் வாக்குச் சீட்டைக் கொடுப்பார். வாக்குகள் பதியப் பெற்ற வாக்குச்சீட்டைத் திரும்ப வாங்கி வந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார் – இதுதான் பா.ஜ.க. கூட்டணிக்கு உதவிய ‘பீகார் மாடல்.பாஜகவுக்கும் – அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணை போகும் பாரபட்சமான முயற்சிகளில், நடுநிலைமையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம்.அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதித்து ஆரோக்கியமான தேர்தல் ஜனநாயகத்தை எண்ணத்தில் கொண்டு செயல்பட வேண்டும் .இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.