hairoil

Dandruff : பெண்களே…! இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப கண்டிப்பா படிங்க..!

By

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று பொடுகு தொல்லை. இந்த பொடுகு என்பது தலையில் உண்டாகும் ஒரு தோல் போன்ற அமைப்பு. இது தலையில் தோல் செல்கள் அதிகமாக உற்பத்தி செய்யும்போது ஏற்படுகிறது. இதன் விளைவாக, தலையில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உண்டாகிறது.

பொடுகு பிரச்சனை ஏற்பட சில காரணங்கள் 

தலையின் தோலில் அதிகப்படியான எண்ணெய் சுரக்கும்போது, ​​அது தோல் செல்களின் இயற்கையான சுழற்சியை பாதிப்பதால், தலையில் பொடுகு உண்டாகிறது. Malassezia furfur என்ற பூஞ்சை தலையில் பொதுவாக காணப்படுகிறது. இந்த பூஞ்சை அதிகமாக வளர்ந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.

சில மருந்துகள், குறிப்பாக மனநல மருந்துகள், பொடுகு தொல்லையை அதிகரிக்கலாம். குளிர்ச்சியான காலநிலை, அதிகப்படியான வெப்பம், அதிகப்படியான புகை அல்லது தூசி போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் பொடுகு தொல்லைக்கு மிகமுக்கிய காரணியாக அமைகிறது.

Dandruff பிரச்னை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை 

பொடுகு தொல்லையில் இருந்து விடுபட, தலைக்கு தினமும் குளிக்க வேண்டும். ஆன்டி-டான்ட்ரஃப் ஷாம்பு பயன்படுத்துவது, தலையில் எண்ணெய் தேய்ப்பதை தவிர்ப்பது, தலையை அதிக வெப்பத்தில் உலர்த்துவதை தவிர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகளை கையாள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதாலும் பொடுகைப் போக்குவதற்கான சிறந்த வழி ஆகும். அந்த வகையில், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள புரதம் ஆகியவற்றை உட்கொள்வது பொடுகைப் போக்க உதவும்.

பொடுகு தொல்லை இருந்தால், ஒரு மருத்துவர் அல்லது தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் பொடுகு ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறியவும், அதற்கான சரியான சிகிச்சையை பரிந்துரைக்கவும் முடியும்.