31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

ஆடல், பாடல் நிகழ்ச்சி – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு!

ஆடல் – பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரினால் 7 நாட்களில் காவல்துறை முடிவெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

ஆடல், பாடல் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதிதர 7 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கு மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அனுமதி கோரி மனு அளித்தால் 7 நாளில் காவல்துறை அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை எனில் அனுமதி வழங்கியதாகவே கருதப்படும்.

அனுமதி தொடர்பாக எஸ்பிக்களுக்கு டிஜிபி புதிதாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எனவே, உயர்நீதிமன்ற கிளையில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரிய மனுக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி தர உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியே ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.