டேய்... முகேனு, கவிணு, தர்ரு போர் அடிக்குதடா - சாண்டி.!

குழந்தையாக மாறி முகேன், கவின் மற்றும் தர்ஷனிடம் பேசும் சாண்டியின்

By ragi | Published: Jun 30, 2020 08:30 AM

குழந்தையாக மாறி முகேன், கவின் மற்றும் தர்ஷனிடம் பேசும் சாண்டியின் குறும்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி. ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை மட்டுமில்லாமல் அவரின் மகள் லாலாவும் ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் குழந்தை பேச்சுக்கு பலரும் அடிக்ட் என்றே கூறலாம்.

வழக்கமாக புகைப்படங்களையும், நடன வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் சாண்டி தற்போது சாண்டி குழந்தையாக மாறி கவின், முகேன் மற்றும் தர்ஷனிடம் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் டேய் முகேனு, கவிணு, தர்ரு வீட்டில செம போர் அடிக்குதடா, எங்க அம்மா வீட்டில வெளியே விடமாடேங்குதடா என்றெல்லாம் செம நகைச்சுவையாக பேசும் சாண்டியின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
 
View this post on Instagram
 

டேய்.. முகேனு, கவிணு, தர்ரு.. போர் அடிக்குதுடா..

A post shared by SANDY (@iamsandy_off) on

Step2: Place in ads Display sections

unicc