வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் மகளை கட்டி அணைத்தப்படி இருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது பாணியில் பதிலடியும் கொடுத்து வருகிறார். இவர்களது திருமணம் ஒருபுறம் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், மற்றொரு புறம் கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் வனிதா.
அந்த வகையில் தனது இளைய மகள் அப்பாவான பீட்டர் பவுலின் தோள் மீது கைப் போட்டு கொண்டுள்ள புகைப்படங்களை பதிவிட்டும், இருவரும் விளையாடி சிரித்து பேசியும், மகளை கட்டி அணைத்தப்படி இருக்கும் பீட்டர் பவுலின் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் உண்மையான தந்தை என்பது வேறு, அப்பா என்பது வேறு, ஒரு அப்பா என்பவர் அம்மாவிற்கு சமமானவர், அம்மா என்பது அனைத்துக்கும் சமம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் உண்மையான தந்தை இல்லாத அனைவருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து வனிதாவின் மகள்கள் பீட்டர் பாலை தந்தையாக ஏற்று கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.