வயதின் உலகநாயகனான சாருஹாசன் நடிக்கும் ‘தாதா87- 2.0’.!

வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் தாதாவாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் சகோதரரான சாருஹாசன் நடிப்பில் கடந்த 2019ல் தாதா87 என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது நடிப்பு திறமையால் தாதாவாக வயதின் உலகநாயகன் என்று அழைக்கப்படும் சாருஹாசன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியிருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

பலம் என்பது உடல் வலிமையை வைத்து முடிவு செய்வதில்லை, மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுகிறது. சத்திரியனாக இருப்பது மட்டுமில்லாமல் சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து சாருஹாசனை வைத்து மீண்டும் ‘தாதா87 – 2.0’ என்ற படத்தை இயக்கவுள்ளார். உள்ளூரில் சாமானியவனாக இருக்கும் ஒரு தாதா,

தனது மூளையை பயன்படுத்தி எப்படி உலகத்தில் உள்ள தாதாக்களை ஆள போகிறார், எவ்வாறு தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை. 90 வயதான தாதாவாக நடிக்கும் சாருஹாசனுடன் நடிகர் விக்ரம் அவர்களின் தங்கையான அனிதாவின் மகன் அர்ஜுமன் இதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மேலும் ஐஸ்வர்யா தத்தா, சாண்ட்ரியா, சாந்தினி, அனித்ரா நாயர், ஜூலி, மனம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கும் இந்த படத்தில் கோபி ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்திலிருந்து சாருஹாசன் அவர்களின் ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Recent Posts

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…

7 mins ago

மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…

11 mins ago

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

1 hour ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

1 hour ago

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…

2 hours ago

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

2 hours ago