அப்பா என்பவர் ஓர் அதிசயமான புத்தகம்!

அப்பா என்பவர் ஓர் அதிசயமான புத்தகம்!

அப்பா ஒரு அதிசயமான புத்தகம் தான். ஏனென்றால், இந்த புத்தகம் நமது கையில் இருக்கும் போது, அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. புரிந்துகொள்ள நினைக்கும் போது, அந்த புத்தகம் நம் கையில் இருப்பதில்லை. இது தான் உண்மையும் கூட.

நம்முடையும் வாழ்க்கையும் ஒரு புத்தகம் தான். இந்த வாழ்க்கையின் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் கடவுளால் எழுதப்படுகிறது. ஆனால், நடுவில் உள்ள அனைத்து பக்களையும் நாம் தான் நிரப்ப வேண்டும். இந்த பக்கங்கள் சந்தோசத்தாலும், உயர்வினாலும், கண்ணீரின்றி, கவலையின்றி நிரப்பப்பட வேண்டும் என்றால், அதற்கு நமக்காக கஷ்டப்பட்டு, கண்ணீர் சிந்தி, நம்மை சரியான வழியில் நடத்த வேண்டும்.

தந்தையின் அன்போடு இணைந்து வாழ்பவர்களை விட, தந்தையின் அன்பை இழந்து அல்லது பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கு தான் தெரியும், தந்தையின் அன்பு எவ்வளவு பொக்கிஷம் போன்றது என்று. எத்தனையோ அறிவுகளுக்கு பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தம் இப்பரஞ்சத்தில் எங்கு தேடினாலும் கண்டெடுக்க இயலாது.

மகனை கஷ்டங்கள் தெரியாமல் வளர்ப்பவர் 

நல்ல அப்பா!

மகனை கஷ்டங்களை எதிர்கொள்ள விட்டு 

துணை நிற்பவர் சிறந்த அப்பா!

அந்த வகையில் நாம் எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் தான். பிறந்த போது நம்மை தோள்களிலும், வளர்ந்த போதும் நம்மை நெஞ்சிலும் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தந்தையர்களும் நமக்கு தெய்வங்கள் தான்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube