அரபிக்கடலில் உருவான 'நிசர்கா' புயல்.! 'ரெட் அலர்ட்' விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த

By manikandan | Published: Jun 02, 2020 11:15 PM

கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 7 மணி நேரமாக நகர்ந்து தற்போது அது தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக உருமாறியுள்ளது.

இந்த நிசர்கா புயலானது மேற்கு-வடமேற்கில் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு-தென்மேற்கில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும் , சூரத்துக்கு தெற்கு-தென்மேற்கில் 640 கிலோ மீட்டர் தொலைவிலும் கொண்டுள்ளது. அந்த புயல் அடுத்த 10 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து தீவிரப் புயலாக மாறக்கூடும். இதனால் மும்பையில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை 11 குழுக்களாகவும், மகாராஷ்டிரத்தில் 10 பேரிடர் குழுக்களும், ஏனைய இடங்களில் 2 குழுக்களும் களமிறங்கியுள்ளன. 

தற்போது இந்த நிசர்கா புயல் காரணமாக குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் எனவும் இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Step2: Place in ads Display sections

unicc