cyclone biparjoy 170,000

தீவிரம் எடுக்கும் பிபர்ஜாய் புயல்…இந்தியா, பாகிஸ்தானில் இருந்து 170,000 பேர் வெளியேற்றம்.!!

By

பிபர்ஜாய் புயல் காரணமாக இந்தியா, பாகிஸ்தானில் இருந்து பொதுமக்கள் 170,000 பேர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிபர்ஜாய் புயல்

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார் ஜாய் புயலானது  நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 5.30 மணி அளவில் குஜராத்தின் சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே  கரையை கடக்கவுள்ளது.

170,000 பேர் வெளியேற்றம்

இந்த நிலையில், புயலின் காரணமாக நிலச்சரிவு, கனமழை பெய்வதால் வெல்லம் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால்  முன்னெச்சரிக்கையாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள 170,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நலியாவில் உள்ள தங்குமிடத்திற்கு சென்றனர்.

 

 

Dinasuvadu Media @2023