பிபர்ஜாய் புயலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என அமித்ஷா பேட்டி.
அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசிய நிலையில், குஜராத்தில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிபர்ஜாய் புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். குஜராத் முதலமைச்சருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா புயலால் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பிபர்ஜாய் புயலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த புயலில் 47 பேர் காயமடைந்தனர். 234 விலங்குகள் உயிரிழந்துள்ளன. புயலின் போது உயிர்களைப் பாதுகாக்க குஜராத் அரசு மத்திய அமைப்புகள் பணியாற்றிய விதம் சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.