ஊரடங்கில் கறிசோறு விருந்து! கைதான இளைஞர்கள் விடுவிப்பு!

ஊரடங்கில் கறிவிருந்து சமைத்து சாப்பிட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார். பின் ஜாமினில் விடுவிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம். வீராணம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கறிவிருந்து சமைத்து, தனிமனித விலகல் இன்றி ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.  இதுதொடர்பான புகைப்படங்களை அந்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, தகவலறிந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை கைது செய்த வீராணம் போலீசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி, எச்சரித்து அவர்களை ஜாமினில் விடுத்துள்ளனர். இதேபோல், தஞ்சை மாவட்டம்  சென்னம்பட்டி கிராமமதை இளைஞர்களும் கறிவிருந்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், இவ்வாறு அலட்சியப்போக்குடன் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.