இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல்!

இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல். இன்று மிக சிறிய

By leena | Published: Jul 13, 2020 01:55 PM

இளநரையை போக்கும் கறிவேப்பிலை துவையல்.

இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் இளம் நரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கம் மற்றும் நமது உடலில் தேவையான சத்து இல்லாததும் தான்.

தற்போது இந்த பதிவில், இளநரையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • மிளகாய் வற்றல்
  • உளுந்து
  • பூண்டு
  • புளி
  • கறிவேப்பிலை
  • தேங்காய் துருவல்
  • உப்பு

செய்முறை

முதலில்  வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய்  சூடானதும்,மிளகாய் வற்றல், உளுந்து போட்டு வறுக்க வேண்டும். அத்துடன், பூண்டு, புளி மற்றும் சுத்தம் செய்த கறிவேப்பிலை, சீரகம் போட்டு வதக்க வேண்டும்.

கறிவேப்பிலை நன்றாக வதங்குவதற்கு முன், தேங்காய் துருவல் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும். ஆறிய பின் தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க வேண்டும். இப்பொது சுவையான கறிவேப்பிலை துவையல் தயார்.

இதனை சோற்றுடன் பிசைந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், முடி சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குவதுடன், இளம் நரையை போக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

Step2: Place in ads Display sections

unicc