பாடத்திட்டங்கள் குறைப்பு – நாளை மறுநாள் முதல்வரிடம் அறிக்கை, அமைச்சர் செங்கோட்டையன்!

பாடத்திட்டங்கள் குறைப்பு – நாளை மறுநாள் முதல்வரிடம் அறிக்கை, அமைச்சர் செங்கோட்டையன்!

பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் படிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்ததான அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் கொடுக்கப்படும் எனவும், மேலும் அறிக்கை கொடுக்கப்பட்ட 5 நாளிலேயே பாடத் திட்டங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும் எனவும் கூறிய அவர், அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்பது தவறான தகவல் என தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்வது குறித்து முதல்வரிடம் இன்னும் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறப்பு ஆசிரியர்களுக்கான வழக்குகள் முடிந்ததும் கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்குவது குறித்து ஏற்பாடு செய்யப்படும் எனவும் பள்ளி பாடத் திட்டங்கள் குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 14 பேர் கொண்ட இந்த ஆய்வுக் குழுவின் அடிப்படையில் 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 60 சதவீத பாடங்களிலிருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அடைக்கப்பட்டுள்ள பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாணவர்கள் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் விதமாக பாடத்திட்டத்தை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube