தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சிபிஎஸ்இ போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிபிஎஸ்இ போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், எவ்வளவு சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்பது ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதனிடையே, பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிகள் திறப்பு குறித்து துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்து, மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும். அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தார். மேலும், தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்