“தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது”- பிரதமர் மோடி உரை!

தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிந்ததாக கூறிய பிரதமர் மோடி, இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று, 74-வது முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், உலக தண்ணீர் தினம் மார்ச் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், அடுத்த 4 மாதங்களுக்கு நீரை சேமிக்கும் முயற்சியில் மக்களான நாம் ஈடுபட வேண்டும் என கூறினார்.

மேலும், இன்று தேசிய அறிவியல் என்பதால் நம் நாட்டின் விஞ்ஞானிகள் பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும் என்றும், நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என கூறிய அவர் தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிந்ததாகவும், இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.