கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 74 இடங்களில் வெற்றி.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கிட்டத்தட்ட 130 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிவின் விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 79 இடங்களில் வெற்றி பெற்று 57 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதுபோன்று, பாஜக 39 இடங்களில் வெற்றி பெற்று, 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும், மதசரபற்ற ஜனதா தளம் 14 இடங்களில் வெற்றி பெற்று, 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முழு விவரம் மாலைக்குள் வெளியாகும்.