ஊரடங்கு உத்தரவு தளர்வு -நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

நியூசிலாந்தில்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து முழுவதும் இதுவரை, 1,472 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது . பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  ,நாட்டில் கொரோனா  பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம் என்று அறிவித்தார்.  மேலும் இன்று முதல் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது .

 இதனால் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பல பேர் தங்கள் பணிகளுக்கு சென்றுள்ளனர்.அங்கு  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்,கொரோனாவின் பாதிப்பின் ஆரம்ப நிலையிலே ஊரடங்கை அமல்படுத்தி ,நாட்டில் உள்ள எல்லைகளை மூட உத்தரவு பிறப்பித்தார்.பல தரப்பினரும் நியூசிலாந்து பிரதமரின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.