ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி.!

திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுடலுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு.

இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்