பஞ்சாப் & மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…!

பஞ்சாப் & மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள்,  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முறையை கையிலெடுத்து உள்ளன. மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற பிரச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில் ஒவ்வொரு மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பிறப்பித்து வருகின்றன இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அதேபோல பஞ்சாபில் வரும் ஜூன் 10-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

author avatar
murugan