ஊரடங்கு நீட்டிப்பா…? இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். மேலும், தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவினருடனும் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.