பஞ்சாபில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க முடிவு.!

பஞ்சாபில் மேலும் 2 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்க முடிவு.!

பஞ்சாபில் மேலும் 3 ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர்  மீண்டும் 19 நாள்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி நீடித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையெடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சமீபத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது சில மாநில முதல்வர்கள் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பஞ்சாபில் மேலும் 3 ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில், பொது முடக்கத்தின் போது காலை 7 மணி முதல் 11 மணி வரை தளர்வு அளிக்கப்படும். அதாவது, காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருள்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் இதுவரை 322 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 71 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube